Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது - மாளிகைக்காடு சுயேற்சை அணியினரின் பகிரங்க அறிக்கை




சாய்ந்தமருது தனியான நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை
சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்கள் மிக விரைவில் எதிர்பார்க்கின்றனர்

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்களின் ஏகோபித்த அரசியல் அதிகாரத்தை ஜனநாயக ரீதியாகப் பெற்ற சுயேற்சைக்குழுவினராகிய நாங்கள் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்று வரை தனியான நகர சபைக்கான போராட்டத்தில் பல அதிகாரங்களையும், பல்வேறு இழப்புக்களையும் சந்தித்த நிலையில், தனியான நகர சபை என்ற இலக்கிற்காக மாத்திரம் தங்களை முழுமையாக அர்ப்பணித்து இன்று வரை சாய்ந்தமருது தனியான நகர சபைக்கான போராட்டத்தில் மக்களின் ஆணையை உறுதிப்படுத்துவதோடு, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

01.          சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை இலக்காகக் கொண்ட சாய்ந்தமருதுமாளிகைக்காடு சுயேற்சைக்குழு, பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் எனைய சமூக அமைப்புக்களுடனும், பொதுமக்களுடனும் இணைந்து உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரை பல தடவைகள் சந்தித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியான நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவிருந்த இறுதிக்கட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக தடைப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.

02.          தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபைக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வற்கு துணை நின்ற கட்சிகளான மு.கா மற்றும் ...கா ஆகியன தற்போது அரசியல் அதிகாரத்தில் தங்களது உச்ச நிலையை அடைந்திருக்கின்றது. இந் நிலையில் எமது பிரதேச மு.கா வின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றிருப்பதும் எங்களுக்கு சாதகமான ஒரு நிலையினை தோற்றுவித்திருக்கின்ற போதிலும், கடந்த காலங்களில் மேற்படி சம்பந்தப்பட்ட அமைச்சர்; எங்களாலும், பள்ளிவாசல், பொதுமக்கள், கொழும்புவாழ் எமது  உறவுகளாலும் மேற்கொள்ளப்பட்ட தனியான நகர சபைக்கான முன்னெடுப்புக்களை முறியடிப்பதில் பாரிய பங்கபளிப்புச் செய்துள்ளமையினையும் மறுப்பதற்கில்லை.
03           இத்தகைய சூழ்நிலையில் சுயேற்சைக்குழு ஆகிய நாங்கள் எங்களது தனியான நகர சபை இலக்கை நோக்கிய பயணத்தில் எத்தகைய விட்டுக் கொடுப்புக்களையும் தனியான நகர சபைக்காக செய்யத் தயாரான நிலையில், பள்ளிவாசல் நிருவாக சபை, உலமா சபை, வர்த்தக சங்கம், மீனவர் சங்கங்கள்;, இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களும் உள்ளிட்ட சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களும் அத்துடன் கொழும்பு வாழ் சாய்ந்தமருது நகர சபைக்கான இலக்கை நோக்கிய தோழர்கள் மற்றும் கடல் கடந்து வாழும் எமது உடன் பிறப்புக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பான சாய்ந்தமருது தனியான நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம்.

மேலும் கடந்த காலங்களில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு எமது இலக்கான தனியான நகர சபையை இழுத்தடிப்புச் செய்தது மட்டுமல்லாது பல கழுத்தறுப்புக்களையும் மேற்கொண்டது போன்ற செயற்பாடுகளோடு அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள நினைக்கும் பட்சத்தில் அது பகற் கனவாகவும் எதிர்காலங்களில் அத்தகையவர்களுக்கு பாரிய அரசியல் பின்னடவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேலும் எமது ஜனநாயக ரீதியான சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை போராட்டம் இறுதி இலக்கை அடையும் வரை வலுவடைந்து செல்வது மட்டுமல்லாது, எங்களது ஜனநாயக ரீதியான போராட்ட முன்னெடுப்புக்களும், வியூகங்களும் எதிர்பார்க்கப்படாத வடிவங்களில் முன்னெடுக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஓற்றுமையே எமது பலம்!
ஜனநாயகமே எமது போராட்ட வழி!!
தனியான நகர சபையே எமது இலக்கு!!!

இவ்வண்ணம்

சாய்ந்தமருதுமாளிகைக்காடு
சுயேற்சைக்குழு உறுப்பினர்கள்,
கல்முனை மாநகர சபை மற்றும்
காரைதீவு பிரதேச சபை.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget