Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பொத்துவில் மத்தியகல்லூரியின் தேசிய பாடசாலை தரமுயர்த்தல் கடிதத்தை கிழக்கு ஆளுநர் வழங்கி வைப்பு. பொத்துவில் மக்களின் நீண்டநாள் கனவு நனவானது.

(பொத்துவில் நிருபர்)
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலையினை தேசிய பாடசாலையாகதரமுயர்த்த பல்வேறு வகையிலும் முயற்சிகள் இடம் பெற்றது.
இச் சந்தர்ப்பத்தில் அண்மையில் நியமிக்கப்பட்டு இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ்அவர்களின் கவனத்திற்கு இவ் வேண்டுகோளை அப் பிரதேசத்தை சேர்ந்த கல்வி மான்களும்,பாடசாலை சமூகமும்உள்ளூர்அரசியல் தலமைகளும் முன் வைத்தனர்.
 மேற்படி பாடசாலையினை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு ஆளுநரின்அனுமதியையடுத்து. கல்வி அமைச்சு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தியுள்ளது.
அதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை ஆளுநர்  அண்மையில் அம்பாறை ஆளுநர் பணிமனையில் வைத்துபாடசாலையின் அதிபர்,பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அரசியல் தலைவர்கள்,ஊர்ப் பிரமுகர்கள்முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கத்தார்.
மேலும் இந்த பாடசாலையை தரமுயர்த்தல் கடிதத்தை அமைச்சில் பெறுவதற்கு அயராத முயற்சி எடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளரும்பிரதேச சபை உறுப்பினரான முஹம்மட் அன்வர் அவர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்
மேற்படி பாடசாலையினுடைய எதிர்கால வளர்ச்சிக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் , முயற்சியையும் வழங்குவதாகஉறுதி மொழி வழங்கினார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்.உப வலயக் கல்வி பணிப்பாளர் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பிரதேசசபை உறுப்பினர்களான அப்துல்  மஜீட் மற்றும் அன்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget