சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி மன்றம் நிச்சயம் வழங்கப்படும் என்று, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நேற்று (21) இரவு சாய்ந்தமருது நகர மத்தியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 8வது கிளை நேற்று (21) சாய்ந்தமருது நகரில் அதன் தலைவர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஸார்ட் பதியுத்தீன், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு ஆற்றிய உரை கீழே வீடியோ காட்சியாகத் தரப்படுகின்றது..
வீடியோ





Post a Comment