விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான இன்று (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் பிரமாண்டமான முறையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்,கல்முனை மாநகரசபை உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் இந்நிகழ்வில் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் குற்றம் சாட்டினார்.
அவர் தெரிவித்ததாவது...
கௌரவ பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களது ஏற்பாட்டில் இன்றைய சுகாதார வார இறுதி நிகழ்வுகள் அனைத்தும் கல்முனை மாநகரசபை எல்லைக்குள்ளேயே இடம்பெறுகின்றது. இதற்க்கு தேவயான மைதான ஒழுங்குகள் முதல் அனைத்து துப்பரவுப் பணிகளும் கல்முனை மாநகர சபையாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையிலும் கல்முனை மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கோ ஊழியர்களுக்கோ இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
கல்முனை மாநகர ஆணையாளரால், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் சபுறுடீன் இடம், தமது மாநகர சபையிலும் பல்வேறு துறைசார்ந்த விழையாற்று அணிகள் உள்ளது. அதனையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தும், இவ்வாறு திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பட்டிருப்பதானது, மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் துப்பரவு பணிகளில் ஈடுபடுவதனால் அவர்கள் "தீண்டத்தகாதவர்கள்" என்று கருதப்பட்டுள்ளதா? என்ற பாரிய சந்தேகத்தை தோற்றுவிப்பதாக உள்ளது. இது தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Post a Comment