Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அகில இலங்கை ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவருக்கு கௌரவம்!



-அபு அலா–


வரக்காபொல தாருள் ஹஸனாத் அகடமியின் AAT இறுதி நிலைப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதன்மை நிலைபெற்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுடன், இவ்வாண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வும் சனிக்கிழமை (23)  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


 


கல்லூரியின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.நபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் முதன்மை நிலைபெற்ற மாணவன் மல்வானையைச் சேர்ந்த எம்.ஐ.ஏ.எம்.அப்கரைக்கை கெளரவித்தனர்.  


அங்கு உரை நிகழ்த்திய பணிப்பாளர்,


 


ஓர் இஸ்லாமிய சூழலில் இவ்வாறான இஸ்லாமியக் கணக்காளர்களை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்கும் ஆசிரியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தார்.


 


அத்தோடு பெற்றோர்களின் ஒத்துழைப்பானது இவ்வாறான சாதனைகளை நிகழ்த்த பாரிய பங்களிப்பினை வழங்குவதாகவும் ஏனைய பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் உயர் கல்வியைத் தெரிவு செய்யும் போது இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடிய வகையில் அவற்றை அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget