
இக்கட்டுரைப் போட்டி “இலங்கை வாழ் பன்மைத்துவ சமூகங்களின் மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” எனும் கருப்பொருளை மையமாகக்கொண்டு நடைபெறவுள்ளது.
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இளமானிக் கற்கைநெறிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் உள்வாரி, வெளிவாரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள்:
1. ஆய்வுக் கட்டுரைக்கான மொழி : தமிழ், சிங்களம், ஆங்கிலம் அல்லது அறபு (ஏதாவது ஒரு மொழியில்) ;
2. 3இ000 சொற்களுக்கு குறையாததாக அமைதல்
3. ஏற்கெனவே பிரசுரிக்கப்படாததாகவும்; ஆய்வுக் கடடுரையின் எழுத்தாக்கத்தரம் பேணப்பட்டதாகவும் இருத்தல்;
4. துறைத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல், (Soft Copies அனுப்பப்படல் வேண்டும்)
5. தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் புத்தகம் அல்லது சஞ்சிகையாக வெளியிடப்படும்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்படும்
முதலாம் பரிசு - 35,000.00
இரண்டாம் பரிசு - 25,000.00
மூன்றாம் பரிசு - 15,000.00
(ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியான பரிசில்கள் உண்டு)
இப்போட்டிக்கான ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பவேண்டிய இறுதித்திகதி 04.04.2016 ஆகும்.
கட்டுரையின் கட்டமைப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு :
இணையத்தளம் : http://www.seu.ac.lk/fia
மின்னஞ்சல் : essaycompetitionfia@gmail.com
தொடர்பிலக்கங்கள் : 0778887315, 0772373524
கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி :
செயலாளர்
ஆய்வுக் கட்டுரைப் போட்டி
இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழிப் பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் – ஒலுவில்
Post a Comment