
இந்தியா குவாஹதி நகரில் இடம்பெற்ற 12வது தெற்காசிய
விளையாட்டுப்போட்டியில் 4x100 மீற்றர் போட்டியில் தங்கப் பதக்கமும்,100
மீற்றர் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்று தாய்நாட்டிற்கும் தனது
பிரதேசத்திற்கும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்த பொத்துவிலைச் சேர்ந்த
ஏ.எல்.எம். அஸ்ரபிற்கு இன்று (18.02.2016) அவரது சொந்தஊரில் மகத்தான
வரவேற்பளிக்கப்பட்டது.
பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்பொத்துவில் மண்ணும், மக்களும் இணைந்து அவருக்கு மகத்தான கொஎரவத்தையும் வரவேற்பையும் வழங்கினார்கள்.
பொத்துவில் மணிக்கூட்டு சந்தியில் வைத்து ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டு பிரதான வீதியூடாக சின்ன உல்லை வரை ஊர்வலம் சென்றது .
இதன்போது மக்களால் பொன்னாடை போற்றி அஸ்ரபின் வெற்றிக்கு வாழ்த்துக்களை வழங்கினார்கள்.
அதேவேளை நாட்டுக்கு புகழைத் தேடித்தந்த அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஷ்ரஃப்பினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அவர் கடமையாற்றும் இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு நேரடியாக சென்று நேற்று (17) புதன்கிழமை பாராட்டினார்.
இதன்போது
நாட்டுக்கு புகழைத் தேடித்தந்த ஏ.எல்.எம்.அஷ்ரஃப்பிற்கு
பிரதி அமைச்சர் ஹரீஸ் அன்பளிப்பு வழங்கி
கௌரவித்தார்.
மேலும்
இராணுவ தலைமையகத்திலுள்ள ஏனைய வட கிழக்கைச்
சேர்ந்த வீரர்களையும் சந்தித்து பிரதி அமைச்சர் கலந்துரையாடினார்.






Post a Comment