அட்டாளைச்சேனை கலாநிதி ரீ.பீ. ஜாயா கனிஷ்ட பாடசாலைக்கு மெஸ்றோ நிறுவனத்தினால் ஒரு தொகுதி கனணி மற்றம் பிறிண்டர் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாநிதி ரீ.பீ.ஜயா வித்தியாலத்தின் அதிபர் ஏ.சீ.றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த உபகரணங்களை கையளித்தார்.
இதன்போது அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் மெஸ்ரோ அமைப்பின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.இர்பான், மெஸ்றோ நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளர் நௌபர் ஏ. பாவா, ஊடகவியலாளர் எஸ்.அறூஸ் உள்ளிட்ட பாடசாலையின் ஆசிரியர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment