பொத்துவிலின் தங்கமகன் அஸ்ரப் இற்கு கல்முனை தொகுதியில் பெரு வரவேற்பு!
இந்தியாவில் இடம்பெற்று முடிவடைந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்
கிழக்கு மண் சார்பாக பங்கு பற்றி ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சல்
ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்ததையும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில்
வெண்கலப் பதக்கத்ததைப் பெற்ற பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரஃபின் அதீத
ஆற்றலுக்கு கல்முனை தொகுதியில் உள்ள மக்கள் பலத்த வரவேற்புகளோடு இன்று
(22) இடம்பெற்ற ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்கள்.
மருதமுனையில் வைத்து ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டு பிரதான வீதியூடாக
பொத்துவில் வரை ஊர்வலம் சென்றடைந்தது.
இதன்போது மக்களால் பொன்னாடை போற்றி
அஸ்ரபின் வெற்றிக்கு வாழ்த்துக்களை வழங்கினார்கள்.
Post a Comment