அட்டாளைச்சேனை,
ஒலுவில் பிரதேசத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 சிறுவர்கள் காட்டு
ஆமனக்காயினை சாப்பிட்டு விசமானதால் அவர்களின் உடல் நலன் கருதி மேலதிக்
சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின்
வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.முஹம்மட் அலி நேற்று (22)
தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
காட்டு
ஆமனக்காயின் அளவு அவர்களின் உடல் அமைப்புக்கெற்ற வகையில் அதன்
பாதிப்பினைச் செலுத்தும். இந்த தாக்கம் சுமார் 2 மணித்தியாலயம் கடந்த
பின்னர்தான் ஏற்படுவதாகவும், அவர்களுக்கு தக்க சிசிக்சையளிப்பதற்கான
போதியளவு மருந்து வசதிகள் இங்கு இல்லாமையினை கருத்திற்கொண்டு தங்களினால்
முதல் நடவடிக்கையாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அனுப்பி கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.
இந்த
காட்டு ஆமனக்காயினை 4 வயது தொடர்க்கம் 7 வயது வரையான பிள்ளைகளே
சாப்பிட்டதாகவும், இதில் ஒரு தாயின் பிள்ளைகள் 3 பேரும் மற்றயவர்கள் 4
சிறுவர்களும் சக குடும்ப உறவினர்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் பணிப்புரைக்கமைவாக அவரின்
இணைப்புச் செயலாளர் ஏ.எல்.அமானுல்லா குறித்த இடத்துக்கு விஜயத்தினை
மேற்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதலை தெரிவித்து
அவர்களின் சிகிச்சை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள துரித
நடவடிக்கையினை சுகாதார அமைச்சர் ஊடாக மேற்கொண்டார்.
Post a Comment