கால
எல்லையின் அடிப்படையில் மின்சார கட்டணத்தை அறவிடும் புதிய முறையொன்றை
அறிமுகப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, காலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை மற்றும் இரவு 10.30 மணிமுதல் காலை 5.30 மணிவரை என இரண்டு காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு மின் கட்டணம் அறவிடப்படும்.
இரவு 10.30 மணிமுதல் காலை 5.30 மணிவரை பாவிக்கப்படும் மின்சாரத்துக்கு அறவிடப்படும் கட்டணம் சாதாரண கட்டணத்தைவிட நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைவடைந்து காணப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறைக்குள் உள்வாங்கப்பட விரும்பும் பாவனையாளர்கள் சிறிய கட்டணமொன்றை செலுத்த வேண்டும் என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

Post a Comment