Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | அம்பாறையில் இடம்பெற்ற Law and society Trust நிறுவனத்தின் ஊடகப் பயிற்சிப் பட்டறை

-அஸ்ஹர் இப்றாஹிம்-
Law and society Trust நிறுவனம் மாகாண மட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடைய திறமைகளினை வலுப்படுத்துவதன் மூலம் நிலைமாற்று நீதி மற்றும் பிரதிநிதித்துவ ஆட்சி ஊடாக இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் தேசிய இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்துதல் தொடர்பாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர்ச்சியான செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று நேற்று ( 16 ) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.

 
அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் , தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் பங்கேற்ற மேற்படி செயலமர்வில் Law and society Trust நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோஸ்தர் சட்டத்தரணி ஐங்கரன் குஹதாசன் மற்றும் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சட்டத்தரணி ஸபரா ஸாஹிட் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

Law and society Trust நிறுவனத்தால் தென்மாகாணத்தில் காலி , மாத்தறை , ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்டங்களிலும் வட மாகாணததில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இச் செயல் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.


 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget