
கல்முனை
ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞான பிரிவு
மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த 2016 ஆம்
ஆண்டுக்கான ” மாணவர்தின விழா” அண்மையில் கல்லூரி
இராச வாசல் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில்
கல்லுரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
கொழும்பு இலங்கை தேசிய வைத்தியசாலையின்
குருதிக்குழாய் , சிறுநீரக சத்திர சிகிச்சைப்பிரிவு சிரேஸ்ட
வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ்
காரியப்பர் பிரதம அதிதியாகவும் , TAF - Programme consultant மற்றும் PCE ( Pvt ) இன் தவிசாளரும் , இக்கல்லூரியின்
பழைய மாணவருமான றிஸாத் சரீப் கௌரவ
அதிதியாகவும் , கல்லூரியின் பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.பீ.முஜீன் , உதவி
அதிபர்களான எச்.எம்.அன்வர்
அலி , எம்.எச்.எம்.அபுபக்கர் , எம்.எம்.நிஸார்தீன்
, எம்.எஸ்.அலிகான் ஆகியோர்
விசேட அதிதிகளாகவும் உயர்தர விஞ்ஞானப் பிரிவு
பகுதித்தலைவர் எம்.எம்.ஏ.சமட் நமது அதிதியாகவும்
கலந்து கொண்டனர்.
விழாவின்
போது பாடரீதியாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் , கற்பித்த ஆசிரியர்களும் ,2015 ஆம் ஆண்டு நடைபெற்ற
க.பொ.த.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்ற மாணவர்களும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
விழா ஞாபகார்தமாக ”சங்கமம்” எனும் மலரும் வெளியிட்டு
வைகக்கப்பட்டது.
Post a Comment