
மருதமுனை - பெரியநீலாவணை வீ.சி.வீதியில் உள்ள இஸ்லாமிக்
றிலீப் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த மூன்று(03) முச்சக்கர வண்டிகள் இன்று (18.06.2016) அதிகாலை
தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் மின்னொழுக்கு
ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை எனவும், தனிப்பட்ட தகராறுகள் காரணமாக தீ
வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக
விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment