Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | வட கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காக மர்ஹூம் அஷ்ரஃப்புடன் இணைந்து குரல் கொடுத்தவர் அலவி மௌலானா - பிரதி அமைச்சர் ஹரீஸ்

-ஹாசிப் யாஸீன்-
ஆளுமை நிறைந்த மூத்த முஸ்லிம் அரசியல்வாதியும்இ சிறந்த தொழிற்சங்கவாதியுமான அஷ்ஷெய்க் அலவி மௌலானாவின் மறைவு நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்இஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டுள்ள தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்இ

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வளர்ச்சிக்கும் கட்சியினை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கும் அமரர் பண்டாரநாயக்காவுடன் தீவிரமாக செயற்பட்ட ஒரு மூத்த முஸ்லிம் தலைவர் மர்ஹூம் அலவி மௌலானா ஆவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவரின் ஆட்சியில் கட்சியில் வளர்ச்சிக்கு தந்தையோடு செயற்பட்ட மர்ஹூம் அலவி மௌலானாவை தேசியப் பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சராக்கி அவரை கௌரவித்தார்.

மர்ஹூம் அலவி மௌலானா தான் அரசியல்வாதி என்பதை விட அவர் ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியாகவே தன்னை அடையாளப்படுத்துவதில் முனைப்பாகவிருந்தார். தொழிலாளர்களின் நலன்களில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். தான் அமைச்சராகவிருந்த ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்களின் நலன்களுக்காக வீதிக்கு இறங்கி போராடிய ஒரு தலைமையாகும்.

தனது அரசியல் வாழ்;க்கையில் இனஇ மத வேறுபாடுகளுக்கு அப்பால் சேவை செய்தவர். வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்புடன் இணைந்து குரல் கொடுத்தவர்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்இ உற்றார்இ உறவினர்கள்இ அனைவருக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடுஇ மர்ஹூம் அலவி மௌலானா மறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர் சுவர்க்கம்; கிடைக்க பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget