
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்ட விசேட தேவையுடையவர்களுக்கு வீடமைப்பு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடமைப்பு உதவித் தொகைக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்இ கிராம சேவக நிர்;வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையவர்களுக்கு வீடமைப்பு உதவித் தொகையாக ரூபா. 2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நான்கு பேருக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் படி 10 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment