நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என மின்சக்தி மற்றும்
புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
பொருளாதார வசதிகளின்மை மற்றும் ஏனைய பல காரணங்களால் சுமார் 3 இலட்சம் குடும்பங்கள் மின்சாரமின்றி வசிப்பதாக அறியக்கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, இந்த குடும்பங்கள் அனைத்திற்கும் விரைவில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் சுரேன் பட்டகொட சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மின்சார விநியோகம் தாமதமானதாக கூறியுள்ள அமைச்சின் செயலாளர், எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சார விநியோகம் நிறைவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும், அனுமதியின்றி குடியேறியவர்களுக்கும் மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித அறிவீடுமின்றி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மின்சார விநியோகிப்படும் எனவும் செயலாளர் சுனில் பட்டகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment