-எம்.ஐ.எம்.றியாஸ்-
இந்த வருடம் முதல் ஹஜ் மற்றும் உம்றாக்கு
செல்லும் நோக்கில் விண்ணப்பிக்கும் முஸ்லிம் அரச ஊழியர்களின் சம்பளமற்ற
விடுமுறை விண்ணப்பங்களை
தாபன விதிக்கோவைக்கு
அமைவாகப் பரீட்சித்து
அவர்களுக்கான விடுமுறைகளை வழங்குவது எனவும்,
அதன் பிரகாரம் சேமித்த விடுமுறை இருப்பவர்களுக்கு
சம்பளத்துடனான விடுமுறையும்,
சேமித்தவிடுமுறை இல்லாதவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையும்
வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இந்நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின்
தலைமையில் நேற்று(29) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.மேற்படி கூட்டத்தில் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி,
கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.ஹசங்க
அபேவர்த்தன, மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.ரி.எம்.நிசாம் மற்றும் முக்கிய
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தவம் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஹஜ்
மற்றும் உம்றா செல்லும் கிழக்கு
மாகாண முஸ்லிம்
அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறை விடயத்தில் பின்பற்றப்படும் தவறான நடைமுறைகள் மற்றும் தாபன விதிக்கோவையில்கூறப்பட்டுள்ளதீ வுக்கு வெளியே செல்லும் போது வழங்கப்படும் லீவு பற்றிய விதிமுறைகள்
என்பன தீர ஆராயப்பட்டன.
கடந்த21.06.2016 ஆம் திகதி கிழக்கு
மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களால்,
புனிதஹஜ் மற்றும் உம்றா செல்வதற்கான
சம்பளமற்ற விடுமுறை வழங்குவதில் பின்பற்றப்படும்தாபன விதிக்கோவைக்கு எதிரான நடைமுறைகளை அகற்றுமாறு கோரும் அவசரப் பிரேரணை ஒன்றுகொண்டு
வரப்பட்டது யாவரும் அறிந்ததே.ஹஜ் மற்றும்
உம்றா செல்ல முஸ்லிம் அரச ஊழியர்கள் தயாராகும் போது, சேமித்த லீவுகள் இருந்தால் மாத்திரமே சம்பளமற்ற
விடுமுறை வழங்கப்படுமென விண்ணப்பங்கள்
திருப்பி அனுப்பப்படுவது, கிழக்கு மாகாண சபையால்
முஸ்லிம்களின் மதச்சடங்குகளை நிறைவேற்ற போடப்படும்தடையாகக் கருதப்படுகிறது என
அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாபனவிதிக் கோவையின் ஷரத்து 12,பிரிவு24 – 2யில்கூறப்பட்டுள்ள, தீவுக்கு வெளியே செல்லும் போது வழங்கப்படும் லீவு பற்றிய விதிமுறை,கிழக்கு
மாகாண சபையில்மட்டும் மீறப்பட்டுள்ளது
என்பதை அவர் அதில் சுட்டிக் காட்டி
இருந்தார்.2010 ஆம் ஆண்டிலிருந்துதான் இப்புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
கடந்த காலத்தில் ஆளுநராக இருந்தவர்20.10.2010திகதியG/ EPC/A/Le.out/Te.10இலக்கம்
கொண்ட கடிதத்தில் வழங்கிய அறிவுறுத்தலின்
பிரகாரம்தான், தாபனவிதிக் கோவையின் ஷரத்து
மீறப்படும் வகையிலான இந்நடைமுறைகள்
பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
முன்னாள் ஆளுநரின்அக்கடிதத்தின்பிரகாரம், லீவு
விண்ணப்பிப்பவருக்கு சேமித்த லீவு இருக்க வேண்டும்,
சேமித்து இருக்கும் லீவுக்கான எண்ணிக்கைக்கு
மட்டுமே லீவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்,
சேமித்த லீவு இல்லாமல் விண்ணப்பங்களை திணைக்களத் தலைவர்கள் அனுப்பக்கூடாது போன்ற
பிழையான நடைமுறைகள் இதுவரைப் பின்பற்றப்பட்டன.
இவற்றைஅகற்றி தாபனவிதிக்கோவைக்குஅமைவாக ஏனைய மாகாண சபைகளில் பின்பற்றப்படும்
நடைமுறைகளை அமுல்படுத்துமாறும் தவம் தனது
அவசரப் பிரேரணையில்
கேட்டிருந்தார்.
ஏனைய மாகாண சபையில் பின்பற்றப்படாத நடைமுறைகள் கிழக்கு மாகாணத்தில் மட்டும் பின்பற்றப்படுவதை ஏற்றுக்கொண்ட
அவர்கள், இந்த வருடம் முதல் ஹஜ் மற்றும் உம்றாக்கு
செல்லும் நோக்கில் விண்ணப்பிக்கும் முஸ்லிம் அரச ஊழியர்களின் சம்பளமற்ற
விடுமுறை விண்ணப்பங்களை
தாபன விதிக்கோவைக்கு
அமைவாகப் பரீட்சித்து
அவர்களுக்கான விடுமுறைகளை வழங்குவது எனவும்,
அதன் பிரகாரம் சேமித்த விடுமுறை இருப்பவர்களுக்கு
சம்பளத்துடனான விடுமுறையும்,
சேமித்தவிடுமுறை இல்லாதவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையும்
வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இந்நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனூடாககடந்த2010 ஆம்ஆண்டிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா செல்வதற்காக சம்பளமற்ற விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் முஸ்லிம்
உத்தியோகத்தர்கள் முகங்கொடுத்து வந்த அசௌகரியங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக முழு முயற்சிகளையும்செய்த மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு அரச உத்தியோகத்தர்களும்,
சங்கங்களும் தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment