முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையுடன் பள்ளிவாசல்கள் ஊடாகவும்
ஏனைய சில அமைப்புகள் வழியாகவும் புனித நோன்பு காலத்தில் பேரீச்சம்பழம் வழங்கும்
நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின்
ஏற்பாட்டில் இன்று (26) தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கும்
நிகழ்வு இடம்பெற்றது.
மருதம் கலைக்கூடலின் பிரத்தித் தலைவர் ஸாஹிர் கரீமின் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில், அவ் அமைப்பின் தலைவரும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சரும்
தபால்துறை அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீமுடைய இணைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத்
தொகுதி பிரச்சார செயலாளருமான அஸ்வான் சக்கப் மௌலானா பிரதம அதிதியாக கலந்து
உரையாற்றியதுடன் பேரீச்சம்பழங்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எப்.ஸஜீனாஸ், தபால் அதிபர்
முகம்மட் முபாறக் எம்.ஐ.ஜௌபார், எம்.ஆர். ரோஷன், யூ.கே.அஸாம், எம்.ஐ.சித்தீக் மற்றும்
தவிசாளர் உவைஸ் முகம்மட் ஆகியோரும் அமைப்பின் நிருவாக அங்கத்தினர்களும் பெண்களும்
கலந்து கொண்டனர்.
குறித்த பேரீச்சம்பழங்கள் சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் தலைவரும்
முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சரும் தபால்துறை அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீமுடைய
இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரச்சார செயலாளருமான
அஸ்வான் சக்கப் மௌலானாவின் முயற்சியால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களால்
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment