கடந்த 03-06-2016 ம் திகதி வெள்ளிக்கிழமை **** நாளிதழில் வெளியான தப்பும் தவறுமான செய்தி ஒன்றினால் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் ”கணிய அளவீட்டு உதவியாளர்” கற்கை நெறி மாணவர்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர்.
கடந்த 29-05-2016 ம் திகதி நடைபெற்ற இம்மாணவர் விடுகை விழாவின் போது பாட விரிவுரையாளர் ஏ.ஆர். றுகைம் றூமிக்கு மாணவர்களின் விருப்பத்தின் பேரில் இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸ்ஸாக் (ஜவாத்) மூலம் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது, இக்காட்சியினை புகைப்படத்தோடு பிரசுரித்திருந்த குறித்த நாளிதழ் கீழே விளக்கம் எழுதுகையில் “கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிரதம அதிதியால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது” என்று விரிவுரையாளரை அவமானப்படுத்தும் வகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இதனிடையே இச் செய்தியை பத்திரிகைக்கு கொடுத்திருந்த குறிப்பிட்ட “******** ***** நிருபர்” அன்று இவ்விழாவுக்கு வந்திருக்கவில்லை.
இவ்வாறு திருட்டுச் செய்திகளை திரிவு படுத்தி எழுதி எங்கள் விரிவுரையாளரை அவமானப்படுத்தியது கண்டு பல தடவைகள் குறித்த பத்திரிகைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு நாங்கள் அறிவித்த போது பத்திரிகைக் காரியாலயத்தில் உள்ளவர்கள் திருத்தமான செய்தியை அனுப்பச் சொன்னதன் பிரகாரம் மின்னஞ்சல் மூலம் அதனை அனுப்பியும் அவர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்து உண்மைச் செய்தியை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
எனவே இப் பிரபலமான பத்திரிகையின் நிருவாகிகள் இதன் பின்னராவது தூக்கம் கலைந்து நிதானத்துடன் செயற்பட்டு போலியான நிருபர்களின் திருட்டுச் செய்திகளை தவறாக வெளியிட்டு பத்திரிகையின் தரத்தை குறைத்து விடாது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
கணிய அளவீட்டு உதவியாளர் கற்கை நெறி மாணவர்கள்
தொழில்நுட்பக் கல்லூரி, அக்கரைப்பற்று

Post a Comment