ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ்
உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
இப்படத்தின் மூலமாக தங்களது பொருட்களை விளம்பரப்படுத்த, பல்வேறு
நிறுவனங்கள் தயாரிப்பாளர் தாணுவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அவ்வாறு 'கபாலி' படத்தோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ள நிறுவனத்தின்
நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ரஞ்சித் "இப்படத்துக்கு பெரிய
எதிர்பார்ப்பு இருக்கிறது. விளம்பரப்படுத்தியது போதும், வெளியிடுங்கள்.
பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் போது மேலும் விளம்பரப்படுத்தி சித்திரவதை
பண்ண வேண்டாம் என தோன்றுகிறது. மக்கள் படத்தைப் பார்க்க
தயாராகிவிட்டார்கள். அதுவே போதும் என நினைக்கிறேன். ரஜினி சார்
அமெரிக்காவில் இருந்து 20-ம் தேதி வரும் திட்டம் இருக்கிறது” என்று
தெரிவித்திருக்கிறார்.
Post a Comment