Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை ஸாஹிரா உயர்தர தொழில்நுட்ப பீட ” மாணவர் தின விழா ”

-எம்.ஐ.எம்.அஸ்ஹர், யு.கே.காலித்தீன், எஸ்.எம்.எம்.றம்ஸான்-
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர தொழில்நுட்ப பீட மாணவர்களின் ” மாணவர் தின விழா ” இன்று ( 27) கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் கல்லூரி இராவாசல் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

பீகாஸ் கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றஹ்மான் பிரதம அதிதியாகவும் , பீ.ஸீ.ஈ. நிறுவன தவிசாளர் றிஸாத் சரீப் , அம்பாறை பொது வைத்தியசாலை பல்வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.அஹமட் வாசில் வாரித் , முன்னாள் கல்லூரி அதிபர் ஏ.எம்.ஹுசைன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் விசேட அதிதியாகவும் , உயர்தர தொழில்நுட்ப பீட தலைவர் ஏ.ஆதம்பாவா , உதவி தலைவர் எம்.ஐ.எம்.பஸீல் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் முதற்தடவையாக நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப துறையில் அம்பாறை மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்ப துறையில் முதன் நிலை பெற்ற , உயிரியல் தொழில்நுட்ப துறையில் முதன்நிலை பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப துறையில் பல்கலைக்கழக அனுமதிபெற்ற 17 மாணவர்களும் , அவர்களுக்கு கற்பித்த ஆசிரிய ஆசிரியைகளும்  , இணைப்பாடவிதான துறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதி , கௌரவ அதிதிகள் மற்றும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் , மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இக்கல்லூரியில் க.பொ.த.உயர்தரத்தில் ஒவ்வொரு பிரிவிலும் மிகவும் கூடுதலான மாணவர்கள் கல்வி பயில்வதால்  உயர்தர மாணவர் தினத்தை பொதுவாக நடத்த முடியாமையினால்  கலை வர்த்தகப் பிரிவு தனியாகவும் , உயர்தர விஞ்ஞான கணிதப் பிரிவு தனியாகவும் , உயர்தர தொழில்நுட்ப பிரிவு தனியாகவும் நடத்த வேண்டிய நிலையொன்று இவ்வருடம் ஏற்பட்டதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget