-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்நோக்கிய பயணத்தை தொடர்வதற்கும்இ எதிர்கால சந்ததியினருக்கு கட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்லுமுகமாக 'வீட்டுக்கு வீடு மரம்' வேலைத்திட்டம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் தேசிய ரீதியில் நாளை திங்கட்கிழமை 01ம் திகதி அங்குரார்ப்பண செய்து வைக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக கல்முனைத் தொகுதிக்கான 'வீட்டுக்கு வீடு மரம்' அங்குரார்ப்பண நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேச மத்திய குழுக்களின் ஏற்பாட்டில் கட்சியின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நாளை திங்கட்கிழமை (01.08.2016) இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு மருதமுனையில் காலை 8.30 மணிக்கும், நற்பிட்டிமுனையில் காலை 10.00 மணிக்கும், மாளிகைக்காட்டில் காலை 11.00 மணிக்கும், சாய்ந்தமருதில் மாலை 4.00 மணிக்கும், கல்முனையில் மாலை 5.00 மணிக்கும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது மக்களுக்கு பயன் தரக்கூடிய மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment