அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் மருதமுனை கிளை ஏற்பாடு
செய்த கூட்டாக ஸகாதுல் பித்ர் கடமையை நிறைவேற்றும் திட்டம்
வெற்றியளித்துள்ளது.
பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்பட்ட உணவுப் பொதிகள்
பிரதேசத்திலுள்ள 18 பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழுள்ள வசதி குறைந்த
குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் மருதமுனை கிளை தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுத்தீன், பிரதித் தலைவர் அஷ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மெளலான, பெருளாளர் மெளலவி எம்.எஸ்.மன்சூர், செயலாளர் மெளலவி ஏ.ஆர்.எம்.சுபைர் செயற்குழு உறுப்பினர் மெளலவி எம்.எம்.ஜெபீர் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உலர் உணவு பொதிகளை பெருநாள் தினத்தில், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் மருதமுனை கிளை அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.
ஜம்மியதுல் உலமா சபையின் மருதமுனை கிளையின் கூட்டாக ஸகாதுல் பித்ர்
வழங்கும் இந்த பணியை பலரும் பாராட்டி பேசுகின்றனர்.
Post a Comment