Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Tech | "Bluetooth" உருவான சுவாரஸ்யக் கதை உங்களுக்கு தெரியுமா?

குறைந்த தூரத்தில் இருந்து தகவல்களை மற்ற கருவிகளுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்யும் தொழில்நுட்பம் தான் ப்ளூடூத்.

இந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் இன்று எந்தக் கருவிகளும் வெளியாவதில்லை என்று தான் கூற வேண்டும்.

எல்லாக் கருவிகளிலும் தவிர்க்க முடியாத ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் பெயர்க் காரணம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தத் தொகுப்பில் ப்ளூடூத் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூத் என்ற பெயர் எப்படிச் சூட்டப்பட்டது என்பதைத் தான் ஸ்லைடர்களில் விளக்கியுள்ளோம்.

துவக்கத்தில் இந்தத் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூத் என்ற பெயர் இல்லை.

1996 ஆம் ஆண்டு இன்டெல், எரிக்ஸன், நோக்கியா, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் வயர்லெஸ் முறையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்யத் தொழில்நுட்பத்தினை உருவாக்கத் திட்டமிட்டன.

ஒவ்வொரு நிறுவனமும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கின, இருந்தும் அவை தேர்ந்தெடுத்த பெயர் ஏதுவும் அமையவில்லை. இந்தக் கவலையை ஹெரால்டு காம்சன் என்ற ராஜா போக்கினார்.

940 மற்றும் 986 போன்ற காலகட்டத்தில் டென்மார்க், நார்வே போன்ற நாடுகளை ஆட்சி செய்த ஹெரால்டு ராஜா தட்சு மொழியில் பிளாதன்ட் என்றும் அழைக்கப்பட்டார். இதன் அர்த்தம் ப்ளூடூத்.

ஹெரால்டு ராஜாவிற்குச் சொத்தை பல் ஒன்று இருந்ததாகவும், அது நீல நிறத்தில் காட்சியளித்ததாலேயே அவருக்கு ப்ளூடூத் என்ற அர்த்தம் கொண்ட புனை பெயர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எதுவானாலும் ப்ளூடூத் என்ற பெயர் ஏன் இந்தத் தொழில்நுட்பத்திற்குச் சூட்டப்பட்டது என்ற கேள்விக்குப் பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

1997 ஆம் ஆண்டு வயர்லெஸ் தொழில்நுட்பத்தினை உருவாக்க ஒவ்வொரு நிறுவனம் பணியாற்றி வந்தது.

இன்டெல் நிறுவன பொறியாளர் ஜிம் கர்டாக் மற்றும் எரிக்ஸன் பொறியாளர் ஸ்வென் மட்டிசன் மது அருந்த முடிவு செய்தனர்.

மது அருந்தும் போது வரலாறு குறித்த பேசிக் கொண்டிருந்தனர். முன்னதாக மட்டிஸன் தட்சு அரசர்கள் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை வாசித்தார்.

அதில் ப்ளூடூத் அரசர் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருந்தது.

ஜிம் கர்டாக் வீட்டிற்குச் சென்று தட்சு அரசர் ஹெரால்டு ப்ளூடூத் குறித்த புத்தகம் படிக்கத் துவங்கினார். பின் ப்ளூடூத் பெயரை குறிப்பாகத் தனது ப்ரோகிரமிற்குச் சூட்டத் தூண்டியதாக எழுதியுள்ளார்.

ப்ளூடூத் பெயரைப் பரிந்துரை செய்து விளம்பர பிரிவினருக்கு விளக்கம் செய்யப் பவர்பாயின்ட் மென்பொருளை கர்டாக் பயன்படுத்தினார்.

ப்ளூடூத் இல்லாமல் ஆங்கில வார்த்தையான ஃபிளிர்ட் (FLIRT) என்ற பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும் ப்ளூடூத் பெயர் அனைவரையும் கவர்ந்ததால் குறிப்பு பெயராகத் தேர்வு செய்யப்பட்டது.

பெயரை இறுதி செய்யும் போது ஐபிஎம் நிறுவனத்தின் பான் (PAN Personal Area Networking) என்ற பெயர் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

இருந்தும் இண்டர்நெட் விளம்பரம் செய்வதில் இந்தப் பெயர் ஒத்து வராது எனத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பர பிரிவினர் சரியான பெயரை தேர்வு செய்யும் வரை குறிப்பு பெயரான ப்ளூடூத் பயன்படுத்தலாம் எனக் கர்டாக் அறிவுரை கூறினார்.

அதன் படி வெளியான பெயர் எதிர்பார்க்காத விதமாக வெற்றி பெற்றது. அதன் பின் இந்தப் பெயர் மாற்றப்படாமல் இருக்கின்றது.

ப்ளூடூத் பெயரில் நீல நிறத்தில் இன்று பயன்படுத்தப்பட்டு வரும் சின்னம் ஹெரால்டு ப்ளூடூத் ராஜாவின் முதல் பெயரை தழுவி உருவாக்கப்பட்டது.

பெயரின் முதல் வார்த்தையை நீல நிற பின்னணியில் வைத்து ப்ளூடூத் சின்னமாக இருக்கின்றது.

இன்று அனைத்துக் கருவிகளிடை தகவல்களைப் பரிமாற்றம் செய்யப் பயன்படும் தவிர்க்க முடியாத தொழில்நுட்பத்தின் பெயர்க் காரணம் பண்டைய ராஜாவின் சொத்தை பல் தான்.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget