-அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்ரீலங்கா பூட் ப்ரோஸெஸ் நிறுவனம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்குசெய்திருந்த தேசிய விவசாய உற்பத்திப் பொருட்களின் "Ag-Biz - 2016 Pro Food Pack" கண்காட்சி ஆகஸ்ட் 12 ம் திகதி அமைச்சர்களான றிசாட் பதியுதீன், தயா கமகே ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு பகுதிகளில் உற்பத்திசெய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மென்பானங்கள், நொறுக்குணவுகள், மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான உணவு அறுவடை, பதனிடுதல், பொதியிடல், பாதுகாப்பு இயந்திரங்கள் போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இடம்பெற்ற மேற்படி கண்காட்சியில் கிழக்குமாகாணத்திலிருந்து, சாய்ந்தமருதில் உற்பத்திசெய்யப்படும் "GE MED" தயாரிப்பான "SUN ZOLA" மென்பான உற்பத்திப்பொருட்கள் மாத்திரம் இடம்பெற்றிருப்பதாக "GE MED" நிறுவன நிறுவனரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.எம்.அமீன் தெரிவித்தார்.
இக் கண்காட்சியின் இறுதிநாளான இன்று (14) இங்கு வருகைதந்த
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் பணிப்பாளர் ரொஹான் ஜயதிலக்க "GE MED" நிறுவனத்தின் காட்சிகூடத்துக்கும் வருகைதந்து
"SUN ZOLA"பணத்தை அருந்தி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment