Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சாய்ந்தமருதில் 80,000 கி.கி. கழிவுகள் அகற்றப்பட்டது; சபையால் முடியாததை சாதித்தாரா? ஆணையாளர்..!

-யூ.கே. காலித்தீன், அஸ்லம் எஸ். மெளலானா-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம்  கல்முனை மாநக சபையினால் இன்று (13) கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இன்றயதினம் முழுவதும் எழுபது ஊழியர்களுடன் 02 கொம்பெக்டர்கள், 02 பெக்கோ இயந்திரங்கள், 09 உழவு இயந்திரங்கள்,01 லொறி என்பன ஒரே தடவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு 80,000 கி.கி. திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

இத்திட்டத்திற்கு சாய்ந்தமருது பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பெரிய பள்ளிவாசல் என்பவற்றின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேற்படி நிகழ்வினை மேற்கொள்வதற்கு உதவி புரிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர், அவரது அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் விஷேட நன்றியினை கல்முனை மாநகர சபை ஆனையாளர் ஜே.லியாக்கத் அலி தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது, சபையால் முடியாததை சாதித்தாரா? ஆணையாளர்..! என்ற வினாவை தோற்றுவித்துள்ளது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget