-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
இதில் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி. தினேஷா டி சில்வா விக்ரமநாயக்க, பணிப்பாளர் கோப குமார் தம்பி, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன், மாநகர ஆணையாளர் ஜெ. லியாக்கத் அலி, கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொரியா நாட்டின், கொய்க்கா உயர் அதிகாரிகள் மற்றும் ஆசியா
மன்றத்தின் அதிகாரிகள் கடந்த 05ஆம் திகதி கல்முனை மாநகரத்துக்கு நட்புறவு விஜயம்
மேற்கொண்டு வருகை தந்தனர்.
இதன் போது மாநகர சபை, கல்முனை ஆதார
வைத்தியசாலைக்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி
வேலைத்திட்டங்கள், பெளதீக ஆளணி வளங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.
இதில் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி. தினேஷா டி சில்வா விக்ரமநாயக்க, பணிப்பாளர் கோப குமார் தம்பி, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன், மாநகர ஆணையாளர் ஜெ. லியாக்கத் அலி, கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆணையாளர், வைத்திய அத்தியட்சகர் ஆகியேர் வருகை
தந்தவர்களிடம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்,
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்தனர். மாநகர
எல்லைக்குள் கொரியா நாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொய்க்கா
வேலைத்திட்டங்களையும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
Post a Comment