அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது -
மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் அஷ்ஷேய்க்
யூ.எல்.எம்.காசீம் (கியாதி) தலைமையில் நேற்று (06)ஆம் திகதி
மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் இப்பிராந்திய இளம்
உலமாக்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் சிரேஷ்ட விரிவுரையாளர்
அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.சலீம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமாசபையின் முன்னால்
தலைவரும் சட்டத்தரணியுமான அஷ்ஷேய்க் என்.எம்.அப்துல் முஜீப் உள்ளிட்டோர்
கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இங்கு ஜம்இய்யா பற்றிய அறிமுகவுரையை அஷ்ஷேய்க் சட்டத்தரணி என்.எம்.அப்துல் முஜீப் உரையாற்றினார்.
நிகழ்வில் ஒற்றுமையின் அடையாளமாக உலமாக்கள் ஒருவரையொருவர்
கட்டித்தழுவி முதாக்கரா செய்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து இளம் உலமாக்களை
கௌரவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் ஜம்இய்யத்துல் உலமாசபையின்
நெறிப்படுத்தலில் இயங்குகின்ற சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தின்
ஆறு ஜூம்ஆ பள்ளிவாசல்களின் தலைவர்களும் மற்றும் அதன் பிரதிநிதிகளும் கலந்து
சிறப்பித்தமை ஒரு விஷேட அம்சமாகும்.
Post a Comment