Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

காஸிம் வீதி புணரமைக்கப்பட்டமைக்கு கல்முனை மக்கள் நன்றியுடன்

( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
30 ஆண்டுகளுக்குப் பின் கல்முனை காஸிம் வீதி புணரமைக்கப்பட்டமைக்கு கல்முனை மக்கள் ஆரவாரத்துடன் சந்தோஷத்தை வெளிக்காட்டி னார்கள்.
கல்முனையின் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை, பெரிய  ஜும்ஆப் பள்ளி வாசல்களுக்குச் செல்லும் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுவதுடன்தனியார் வைத்தியசாலைகள்,தைக்காப்பள்ளி மற்றும் மையவாடிகள் இவ்வீதியில் காணப்படுவதுடன்  எமது ஊரின் அபிவிருத்தியின் முழு வடிவமான முன்னால் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்  இல்லமும் இவ்வீதியில்தான் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை டாக்டர்  ஜெமீல் பவுண்டெஸன் மற்றும் கரைவலை மீனவர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காஸிம் வீதிக்கு விரைவாக காபட்  இட்டு மக்கள் பாவனைக்கு வழங்கியமைக்காக  வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  உயர் அதிகாரிகள்  முதல் சாதாரன  ஊழியர்களையும் மற்றும் இவ் வீதியின் கொந்தராத்துக் காரர் அவர்களையும் கௌரவித்து பாராட்டியதுடன்  அவர்களுக்காக விஷேட துஆ  பிரார்த்தனையும்   கல்முனை மாபிள் பீச் கூட்ட மண்டபத்தில்  இடம் பெற்றது.





  

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget