வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்பவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக 300
அமெரிக்க டொலர்களை கட்டாயப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேஷப்பிரிய குறிப்பிட்டார்.
கடந்த வரவு செலவுத்திட்டத்திலும் இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்ததாக உபுல் தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டில் தொழில் புரியச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட 110 பேருக்கு இதுவரை 167 இலட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளதாக வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

Post a Comment