நள்ளிரவில் நடுஊருக்குள் புகுந்த யானையொன்று சுமார் ஒருமணிநேரம் திகிலையேற்படுத்திச்சென்றுள்ளது.இச்சம்பவம் நேற்று (22) நள்ளிரவு சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு 12.30மணியளவில் குளவெளிப்பகுதியூடாக காரைதீவு ஊருக்குள் புகுந்த தனியன் யானையொன்று வீதிவழியாக கடற்கரைப்பகுதிக்குச் சென்று கடற்படைமுகாமூடாக மாளிகைக்காடு, சாய்ந்தமருதுப் பகுதிக்குச் சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து காரைதீவு ஊடாக மீண்டும் வயல் பக்கம் சென்றுள்ளது.
இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மக்கள் அச்சத்துடன் பொழுதைக்கழிக்கவேண்டியதாயிற்று.
அதன்போது சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியிலுள்ள வியாபாரஸ்தலம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீவி கமராவில் சிக்கிய காட்சியே இது.


Post a Comment