Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | தனி நபர் சர்ச்சையை மாநகர பிரச்சினையாக்கும் கல்முனை மாநகர ஆணையாளர் - சாய்ந்தமருது வர்த்தக சங்கம்

தனி நபர் சர்ச்சையை ஒன்றை மாநகர சபைக்குட்பட்ட பொதுப் பிரச்சினையாக மாற்ற கல்முனை மாநகரசபை ஆணையாளர் முயற்சிப்பதாக  சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


அது தொடர்பாக சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்க செயலாளர் யூ.எல்.சத்தார் இன்று (05) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்முனை மாநகர சபை ஆணையாளரை சாய்ந்தமருது வர்த்தகர் ஒருவர்  அவமதித்ததாக கூறி அங்கு வேலை செய்யும் ஊழியர்களோடு வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

சாய்ந்தமருதில் பிரதான வீதியில் குறிப்பிட்ட நபர் தனது வியாபார நிலையத்துக்கு முன் தனது பாவனை மோட்டார் சைக்கிளை தரித்து நிறுத்தியிருந்த போது, அவ்வழியால் இரவு நேரத்தில் குடும்பதினரோடு  வந்த ஆணையாளர் லியாக்கத் அலி அவர்கள் அந்த இடத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அகற்ற முற்பட்ட போது, அதன் உரிமையாளர் ஏன் அதனை எடுக்கின்றீர்கள் என கேட்டுள்ளார், அதற்கு அவர் எனது வாகனத்தை பார்க் பன்ன என்று சொல்லியுள்ளார், பின்னர் தொடர்ந்து பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த இடத்தில் நடந்த சம்பவம் என அறிய முடிகிறது.

அத்துடன் தனது வாகனத்தை பார்க் செய்வதற்காக  அடுத்தவரது வாகனத்தினை எடுக்குமாறு கோரும்போது தாழ்மையான முறை பின்பற்றப்பட்டிருப்பின் இச்சம்பவம் இடம்பெற்றிருகாது என்பதே இயல்பு நிலை.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு வாகனமும் வீதியில் வைத்து விற்பனை செய்யும் நடைமுறை சாய்ந்தமருதின் எந்த ஒரு வர்த்தக நிலையத்திலும் இல்லை. இவ்வாறு இருக்க வீதியில் விற்பனைக்குரிய வாகனம் இருந்தது என்பது பொய்யான செய்தியாகும்.

தற்போது ஹஜ்பெருநாள் வர்த்தகம் சாய்ந்தமருதின் எல்லா இடங்களிலும் சூடுபிடித்துள்ளதால் வாகன நெருக்கடிகள் நெரிசல்கள் இருக்கின்றன அவற்றை உரிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கல்முனை போலிசார்  உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இரவு நேரத்தில் கல்முனை பொலிஸாரின் ஒத்துழைப்பும்  செயல்பாடும்  எங்களை போன்ற வர்த்தகர்கள் நன்கு அறிவோம் அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவிக்கிறோம்

ஆனால் கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி தனது தனிப்பட்ட நலனுக்காக அல்லது இயலாமையின் வெளிப்பாடாக கல்முனை மாநகர ஊழியர்களை பிழையாக வழிநடத்த முற்படுவது கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும். அவர்களது குறைகளை மறைக்க புதிய உபாயம் ஒன்றை கையிலெடுத்த ஒர் விடயமாகஙவே இதனை கான்கின்றோம்.

எம்மைப்பொறுத்தவரை எமது வர்த்தகரை பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும் ஆனால் உரிய வர்த்தகர் குற்றமிழைத்திருந்தால் அவருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்நிலையில்  அவர்கள் முழு கல்முனை மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவையை முடக்கி வைக்க முடியாது.

அத்துடன் சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையும் சம்பவ இடத்தில் பிரஸ்தாபித்ததாக மாநகர ஆணையாளர் கூறியுள்ளார்.

உண்மையும் அதுதான் எங்களுக்கு என்று ஒரு சபை இருக்குமானால் எமது மக்களை நாம் கட்டுப்படுத்திக்கொள்வோம் அவர்களுக்கு தரமான சேவையை எம்மால் வழங்க முடியும். எமது மக்களுக்கு எது தேவை என்பதை நாமே அறிவோம்.

எமது சாய்ந்தமருது  மக்கள் தற்போது விரக்தியுற்று அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இப்படியான நிலையில் அரசியல் வாதிகள் தொடக்கம் அதிகாரிகள் வரை மக்களை வெறும் பசப்பு வார்த்தைகள் கூறி ஏமாற்றுகிறார்கள் என்கிற குற்றசாட்டு மக்கள் மத்தியில் இருக்கிறது.

அந்த அடிப்படையிலே மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம். இதனை படித்த புத்திஜீவி என்ற அடிப்படையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். மாறாக அப்பாவி வர்த்தகனை ஆத்திரமூட்டி தனது சுயலாபத்த்தினை அடைய முட்படக்கூடாது.

மிக நீண்ட காலமாக எமதூரில் வாகன தரிப்பிடம் இல்லாதது மாத்திரமல்ல அன்றாடம் பல இன்னல்களை எதிர்நோக்குகிறோம். அவற்றுக்கு ஒரு தீர்வுதான் எமது தனியான உள்ளுராட்ச்சி கோரிக்கை. அந்த அடிப்படையிலே இந்த உள்ளுராட்ச்சி விவகாரம் சம்பவ இடத்தில் குறித்த வர்த்தகனால்  பேசப்பட்டிருக்கலாம்

ஒரு வர்த்தகன் தன்னோடு கொண்ட பிரச்சினைக்காக முழு சாய்ந்தமருது வர்த்தக சமூகத்துக்கு இழுக்கு ஏட்படுத்தும் வகையில் அவர் கருத்துக்களை முன்வைப்பதில் இருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எம்மைப்பொறுத்தவரை குறித்த வர்த்தகன் குற்றமிழைத்தால் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும். ஆனால் வேண்டுமென்று ஒருவரை சீண்டி வம்புக்கு இழுத்துவிட்டு சாய்ந்தமருது வர்த்தகன் பிழை செய்துவிட்டான் என கூற முற்படுவதை கண்டிக்கிறோம். அத்துடன் இவ்விடயத்தில்  யாருக்கும் அநீதி இழைக்கப்படுமானால் அதனை வெறுமனே  பார்த்து கொண்டு  சும்மா இருப்போம் என்று நினைத்துவிட வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்

செயலாளர்,
சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget