சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் முயற்சியால் இன்று (27/09/2016)கல்முனை மாநகர ஆணையாளர் அவர்களுக்கும் சாய்ந்தமருது
வர்த்தகர் ( மோட்டார் சைக்கிள் கடைக்காரர் ) ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு சம்பந்தமான வழக்கினை வாபஸ் பெற்று எமது மாநகர ஒற்றுமைக்கு வழி வகுக்கும் வகையில் முடிவுக்கு கொண்டு வந்தாக சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் செயலாளர் யூ.எல்.சத்தார் (ஜலால்-இக்ரா) கலசம்.கொம் இற்கு தெரிவித்தார்.
சுமார் ஐந்து வருடங்கள் நீடிக்கக்கூடிய இந்த பிரச்சினையை இரண்டு தவணைகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்தமை எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது எமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
![]() |
| யூ.எல்.சத்தார் |
மேலும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ ஏ சலீம் அவர்களும் செயலாளர் யூ.எல்.சத்தார் அவர்களும் இதனை இனக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக இன்று கல்முனை நீதிமன்றத்திற்கு சென்றதோடு இவ்வழக்கினை முடித்து வைத்து சமாதானத்தினை ஏற்படுத்தி தந்தமைக்கு சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தினருக்கும் குறிப்பாக செயலாளர் யு எல் சதார் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவிப்பதாக குறித்த வர்த்தகர் தெரிவித்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எமது வேண்டுகோளுக்கு இணங்கி இவ் வழக்கினை வாபஸ் பெற்று சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டமைக்கு கல்முனை மாநகர சபை ஆணையாளர் லியாக்கத் அலி சேர் அவர்களுக்கு சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இதற்கு உடன்பாடாகவும் ஆலோசனைகளையும் வழங்கிய சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நீதமான முறையில் நடந்து கொண்ட எமது கல்முனை பொலிஸ் நிலையத்துக்கும் சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment