Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சம்மாந்துறை டார்கெட் கல்லூரி பரிசளிப்பு நிகழ்வு!

சம்மாந்துறை டார்கெட் கல்லூரி பரிசளிப்பு நிகழ்வு இன்று (26) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஆங்கிலப் பாட ஆசிரியர் சட்.எம். ஹதீக் நப்ரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் எம்.ஜப்பார் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக இக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி முதல்வர் எம்.ஜப்பார்மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர் சட்.எம். ஹதீக் நப்ரீஸ் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், தரம் 6 முதல் 10 வரையான வகுப்புகளை சேர்ந்த ஆங்கிலம் மற்றும் வரலாறுப் பாடங்களில் 90 புள்ளிகளுக்குமேல் பெற்ற 40 மாணவ, மாணவிகள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget