Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய "இன்று மாறும் நாளை" கவிதை தொகுதி வெளியீட்டு விழா!

-யூ. கே. காலித்தீன்-
மருதூரின் கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய "இன்று மாறும் நாளை" கவிதை தொகுதி வெளியீட்டு விழா, கவிஞர் நவாஸ் செளபியின் தலைமையில், தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கல்முனை சாஹிரா கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இன்று (18) வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுத்தீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நூலின் பிரதிபலத்தினை சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் விஷேட தேவைப்பிரிவு மாணவச் செல்வங்கள் நுகர்ந்து கொள்வதற்காய் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget