சுமார் 18 மாதங்களாக இழிபறி நிலையில் இருந்து வந்த, பெருந்தோட்ட
தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பான கூட்டொப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி நாளாந்த சம்பளமாக 730 ரூபாய் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதேவேளை தமக்கு 1000ம் ரூபாய் தினக் கூலி வழங்க வேண்டும் என கோரி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது அவர்களுக்கு 110 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கவே இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை 620 ரூபாவாக இருந்த அவர்களது நாட் சம்பளம் 730 ரூபாவாக உயர்த்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஒப்பந்தத்தின் படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கவும், தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது குளவித் தாக்குதலுக்கு இலக்கானால் மீள பணிக்கு வரும் வரை அவர்களுக்கான வேதனத்தை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கூட்டொப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ஜோன் செனவிரத்ன, நவீன் திஸாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் ரவி சமரவீர உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Post a Comment