ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு சொந்தமான
விமானங்களில் ´சம்சுங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களை
கொண்டுவருவது மற்றும் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சம்சுங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து விமானங்களில் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
முன்னதாக அமெரிக்கா இதுபோன்றதொரு தடை உத்தரவை அந்த நாட்டு விமானங்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விதித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
சம்சுங் நிறுவனம், கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செல்லிடப்பேசிகளில் பொருத்தியுள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடிப்பதாக உலகின் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 25 இலட்சம் கேலக்ஸி நோட்-7 ரக செல்லிடப்பேசிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்ததுடன், அதன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்துவதாக சம்சுங் நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment