Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | பழைய சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் ரத்து; புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுமாறு அறிவுறுத்தல் !

பழைய சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் சாரதிகளுக்கு  தரவுகள் அடங்கிய நவீன ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது சுமார்  11 இலட்சம் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதாக வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்  ஜயத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்து புதிய ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் சாரதிகள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பான பதிவுகளை கோவைப்படுத்த இதன் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதுடன் போக்குவரத்து விதி முறைகள் மீறப்படுவதை குறைக்க முடியும் எனவும் வாகன போக்கவரத்து திணைக்களத்தின் ஆணையாளர்  நாயகம் ஜயத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget