அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 8வது கிளையும், கிழக்கு மாகாணத்தின் முதலாவது கிளையும் நேற்று (21) சாய்ந்தமருது
நகரில் அதன் தலைவர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல்
தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஸார்ட் பதியுத்தீன், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஸார்ட் பதியுத்தீன், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், லக்சல நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் உபவேந்தருமான கலாநிதி
எஸ்.எம்.எம்.இஸ்மாயில், காரீயமணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் பாராளமன்ற
உறுப்பினருமான எஸ்.எஸ்.பி. மஜீத், லங்கா அசோக் லேலன்ட்
நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வருமான கலாநிதி சிராஸ்
மீராசாஹிப், உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment