-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (22) சனிக்கிழமை மிக கோலாகலமான ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் மகத்தான வரவேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மைதானத்திற்கான அடிக்கல்லினை நட்டி வைத்தார்.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான எம்.தமீம், ஏ.எல்.எம்.மாஹிர், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.இஸ்ஸதீன் உள்ளிட்ட உலமாக்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசியர்களுக்கு பரிசில்கள், நினைவுச் சின்னம் என்பன வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment