Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

டெங்கு அபாயம் தீவிரம்; இளைஞர்கள் களமிறங்கவேண்டியது காலத்தின் கட்டாயம் - Dr. ஆரிப்

டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

குறிப்பாக, சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு மற்றும் நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் இந்நிலைமை ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலைகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுளம்புக் கடியிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான காரணிகளை தமது வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் அசிரத்தையாக இருந்து விடாதீர்கள்!

"வந்த பின் வருந்துவதை விட, வராமல் இருக்க முயற்சிப்பதே மேலானது"

உதவுங்கள்!

டெங்கு நோய் ஆபத்திலிருந்து தம்மையும் தமது உறவுகளையும் தமது பிரதே மக்களையும் காப்பாற்றும் விதமாக, குறித்த பிரதேசங்கள் சார்ந்த விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் என்பன, பிரதேச செயலாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியுடனும் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

இந்த விடயத்தில், அழைப்புக்காக காத்திராமல் தாமாகவே முன் வந்து செயற்படுவது சாலவும் சிறந்தது.

மக்களை விழிப்புணர்வூட்டும் முயற்சியில், பள்ளிவாசல், கோயில், தேவாலயம் போன்ற மதத்தலங்கள் கூடிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை இப்போதிருந்தே ஏனைய பிரதேசங்களிலும் ஆரம்பிக்க வேண்டும்.


நுளம்புகள் தமது தீனிக்காக ஐந்து கிலோமீட்டர் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

டாக்டர் என். ஆரிப் 
பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு 
கல்முனை  

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget