ஸ்ரீ லங்கா தௌஹீத்
ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷந்தன கலங்சூரிய, இன்று
உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக், மாளிகாவத்தை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தொடந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை பிரபதீப மாவத்தையில் 3ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையிலும், மக்களை தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment