சுதந்திர இலங்கையின் 70 ஆவது மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவால் இன்று (10) மாலை 2 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும், வகையிலான வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரிவினரின் கருத்துக்களை உள்வாங்கி, இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (11) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை அன்றைய நாள் மாலை 5 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், டிசம்பர் 10 ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.
Post a Comment