சாய்ந்தமருத்துக்கான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நாளை (14) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி மெகா வேலைத்திட்டம், கரைவாகு வேட்டையில் உள்ள வெலிவோரியன் கிராமத்துக்கான காணி நிரப்புதல், சாய்ந்தமருது அஸ்ரப் மைதான சுற்றுமதில் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைத்தல், சாய்ந்தமருது அஸ்ரப் மைதானத்தில் பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடுதல், போன்றவை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டு, மாலை 6.30 மணியளவில் கடற்கரை வீதியிலுள்ள பெளஸி மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தெரிவித்தார்.

Post a Comment