இலங்கை
பொலிஸ் திணைக்களத்தின் 150வது பொலிஸ் தின விழா கொண்டாட்டம் நேற்று முன்தினம் (01) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில்
இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி
விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர
கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, ஞானமுத்து ஸ்ரீநேசன்,
சீ.யோகேஸ்வரன், கவிந்திரன் கோடிஸ்வரன், மஃரூப், சிறியானி விஜயவிக்ரம, கிழக்கு
மாகாண அமைச்சர்களான துரைராஜசிங்கம், ஆரியவதி கலபதி உட்பட கிழக்கு மாகாணசபை
உறுப்பினர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டபிரதிப் பொலிஸ் மாஅதிபர்
ஜெயகொடஆராச்சி, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
கருணாநாயக்க உட்பட இலங்கை பொலிஸ் படை, விமானப் படை, கடற்படை, இராணும், பொலிஸ்
விஷேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள், அரச உயரதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பொலிஸ் தினத்தை
முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கட்டுரை மற்றும்
சித்திரப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், பொலிசாருக்கான
கிரிக்கட், உதைப் பந்து, வலைப் பந்து போன்ற போட்களில் வெற்றியீட்டிய
பொலிசாருக்கும் கிண்ணங்களும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன், பல்வேறு
கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதன் போது
பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிதிகளினால் கிழக்கு மாகாண சிறந்த பொலிஸ்
நிலையம், சிறந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக தெரிவு
செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு பல்வேறு குற்றங்களை ஒழிப்பதற்கு பாடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் வெகுமதிகள் வழங்கி வைக்கபட்டது.
இறுதியில்
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவினால்
இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment