
திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ் பகுதிகளில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பல பகுதிகள் போர்க்களமாக மாறியது.
வன்முறையின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக ஐஸ்அவுஸ் மட்டுமின்றி திருவல்லிக்கேணி, மெரீனா கடற்கரை பகுதிகளில் பதட்டம் காணப்பட்டது.
பொலிஸ் நிலையம் இருக்கும் சாலையில் உள்ள என்.கே.டி. பள்ளிக்கூடத்துக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது.
அனைத்து மாணவிகளும் அவசரம், அவசரமாக தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இந்த பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment