ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 ஆவது பேராளர் மாநாடு கொழும்பில் இன்று (12) நடைபெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.
மேலதிக பிரசார செயலாளராக மௌலான தெரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேலதிக பிரசார செயலாளராக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர முன்னாள் மேயர் மசூர் மௌலானாவின் மறைவினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவிசாளர் பதவி வெற்றிடம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவிக்கு நேற்றிரவு இடம்பெற்ற உயர் பீட கூட்டத்தில் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர்
பசீர் சேகுதாவூத் கடந்த வாரம் இடம்பெற்ற அதியுயர் பீட கூட்டத்தில்
இடைநிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் கடசியின் மூத்த போராளியும் முன்னாள் செயலர் நாயகமுமான எம்.ரீ.ஹஸனலியை சபையினர் பிரேரித்திருந்த பொழுதும் அவர் , தாம்கட்சியில் இனி இந்தப் பதவியையும் வகிக்கப்போவதில்லை, அடிமட்ட தொண்டனாகவே இருக்கப்போவதாகத் தெரிவித்து அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச்செய்ததை தொடர்ந்து குறித்த தவிசாளர் பதவியானது வெற்றிடமாகவே உள்ளது.

செயலாளரின் அதிகாரம் குறைப்பு
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்தில் செயலாளர் நாயகம் எனும் பதவி செயலாளர் எனும் பதவியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து கட்சியின் செயலாளராக, இதுவரை காலமும் அதியுயர் பீட செயலாளராக செயற்பட்ட மன்சூர் ஏ. காதர் தெரிவுசெய்யப்பட்டார்.
ஏனைய பதவி நிலைகளில் மாற்றங்கள் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கட்சியின் செயலாளராக, இதுவரை காலமும் அதியுயர் பீட செயலாளராக செயற்பட்ட மன்சூர் ஏ. காதர் தெரிவுசெய்யப்பட்டார்.
ஏனைய பதவி நிலைகளில் மாற்றங்கள் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment