விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை
முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச
செயலக ஊழியர்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்
போட்டி இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஒழுங்கு செய்திருந்த அணிக்கு 11
பேர் கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்
போட்டியில் 17 ஓட்டங்களினால் காரைதீவு பிரதேச செயலக அணியினர் வெற்றிக்
கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சாய்ந்தமருது வொலிவோரியன் அஷ்ரப் ஐக்கிய விளையாட்டு
மைதானத்தில் இன்று (9) வியாழக்கிழமை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச
செயலாளர் ஐ.எம்.றிக்காஸ் தலைமையில் இடம்பெற்ற போட்டியில் சாய்ந்தமருது
பிரதேச செயலக அணியினர் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று காரைதீவு பி.செ.
அணியினை துடுப்பெடுத்தாடும்படி இணங்க காரைதீவு பிரதேச செயலக. அணியினர் 15
ஓவர்கள் முடிவில் 08 விக்கட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.
காரைதீவு பிரதேச செயலக அணி சார்பாக ஏ.எம்.றினோஸ் 31
ஓட்டங்களயும், ஏ. நௌஷாத் 24 ஓட்டங்களையும் பெற்றனர் பந்துவீச்சில் ஏ.சாஹீர்
11ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
114 ஓட்டங்களை வெற்றி இழக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய
சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து
94ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.
சாய்ந்தமருது
பிரதேச செயலக அணி சார்பாக எல்.ஜஹான் 14, ஏ.எல். நஜிபுடீன் 13 ஓட்டங்களையும்
பந்து வீச்சில் ஏ.றினோஸ் 13 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை
கைப்பற்றினார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி ஏ.ஜௌபர்
பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலம்புரி சங்க
செயலாளர் எம்.ஐ. இஸ்ஹாக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு கிண்ணங்களை
வழங்கிவைத்தனர். இந்நிகழ்வில் சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேச செயலக
உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.





Post a Comment