அட்டாளைச்சேனை
கல்விக்கல்லூரியில் கடமையாற்றி ஓய்வுபெற்ற விளையாட்டுத்துறை விரிவுரையாளர் முஸ்தபா ஆசிரியர் இன்று (07) காலமானார்,
அன்னாருக்கு பாராளுமன்றத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (07) புதன்கிழமை பாராளுமன்றத்தில்
விiளாயாட்டுத்துறை சம்பந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் தனது அனுதாபங்களை தெரிவித்தார்.
விளையாட்டுத்துறையில்
நிபுணத்துவம் மிக்கவராக காணப்பட்ட மறைந்த விரிவுரையாளர் முஸ்தபா அம்பாறை
மாவட்டத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
இப்பிராந்தியத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியதோடு
தேர்ச்சிபெற்ற விளையாட்டு ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.
அன்னாரின் இழப்பு அம்பாறை மாவட்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்
என பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கு தெரிவித்தார்.
Post a Comment